கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இல்லை

*சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி : மழை பெய்யாத நிலையில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கிய இரு மாதங்கள் தென்மேற்கு பருவ மழை பெய்யும். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கிய இரு மாதங்கள் வடகிழக்கு பருவ மழை பெய்யும். அச்சமயங்களில் அனைத்து நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.

இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். குறிப்பாக ஊட்டி அருகே உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சி, காட்டேரி நீர்வீழ்ச்சி போன்ற பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்து செல்வது மற்றும் புகைப்படமும் எடுத்துச் செல்வது வழக்கம்.

குறிப்பாக கர்நாடக மாநில மைசூர் மற்றும் முதுமலை செல்லும் சுற்றுலா பயணிகள் கல்லட்டி நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்துச் செல்வது வாடிக்கை.இந்நிலையில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு தெரியவில்லை.இதனால் அனைத்து அணைகளிலும் தண்ணீர் குறைந்தே காணப்படுகிறது.மேலும் நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.ஊட்டி அருகே உள்ள கல்லடி நீர்வீழ்ச்சியும் தற்போது தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related posts

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்