நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பின்மை வெல்ல பாடுபடுவோம்: எஸ்டிபிஐ மாநில தலைவர் பேட்டி


அம்பை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பின்மை வெல்ல பாடுபடுவோம் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அளித்த பேட்டி: தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த 10ஆண்டு காலமாக மக்களுக்கு விரோதமாக நடைபெறும், பாஜ ஆட்சியை அகற்றிட மதசார்பற்ற சக்திகளுடன் ஒன்றிணைந்து மதவாதம் வீழ்த்தப்பட்டு மதசார்பின்மை வெல்ல பாடுபடுவோம்.

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். தேவையான நிதி ஒதுக்கீடு செய்து நெல்லை மாவட்டத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்’ என்றார்.

Related posts

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்

இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை