இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் மறுகுடியேற்றம் மசோதா நிறைவேறியது: தமிழ் எம்பிக்கள் எதிர்ப்பு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் அமைக்கும் மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது. இந்த மசோதாவின்படி, நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்த அவசியமாக நடவடிக்கைகள், உள்நாட்டு போரால் இடம்பெயர்ந்த தமிழர்களை மறுகுடியேற்றம் செய்தல், முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளித்தல் உள்ளிட்ட பணிகளை தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் மேற்கொள்ளும். இதுதொடர்பாக 11 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அலுவலகம் இலங்கை அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கும். நல்லிணக்க அலுலகத்தை அமைப்பதன் மூலம் அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடன் வாழ முடியும் என நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே கூறினார். இந்த மசோதா மீதான விவாதம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இதற்கு முன் அமைக்கப்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகள் இலங்கை தமிழர்களுக்கு எந்த வித நன்மையும் ஏற்படவில்லை எனக்கூறி மசோதாவுக்கு தமிழ் எம்பிக்கள் 7 பேரும் எதிர்த்து வாக்களித்தனர். ஆனாலும், 41 எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Related posts

பொது இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை தயாரிக்கிறது சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் பெட்டி தொழிற்சாலை!!

நகைக்கடை நடத்தி ரூ.100 கோடி நகை, பணம் மோசடி செய்த ஆசாமி