இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட இந்திய கம்யூ. வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 8ம் தேதி, நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை மிருகத்தனமாக தாக்கி அவர்கள் பிடித்த மீன் மற்றும் நண்டுகளையும் மீன்பிடி வலையையும் பறித்து சென்றனர். தற்போது மீண்டும் நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 25 மீனவர்களை கைது செய்தும், இரு படகுகளை பறிமுதல் செய்தும் உள்ளனர். தமிழகம், புதுச்சேரி மீனவர்களுக்கு தொடர்ந்து இலங்கை கடற்படையால் இழைக்கப்பட்டு வரும் அட்டூழியங்கள் தொடர்கதையாக உள்ளது. பகை நாடு எனக் கருதப்படும் பாகிஸ்தான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களுக்கு இத்தகைய துன்பங்கள் ஏற்படுவது இல்லை. ஆனால் நட்பு நாடு எனக் கூறப்படும் இலங்கை கடற்படையால் தமிழக, புதுவை மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்க ஆக்கப்பூர்வநடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

புல்லட்சாமிக்கு திடீரென அழுத்தம் கொடுக்க முடிவு செய்திருக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி