ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

*திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.
தூத்துக்குடி சின்னகோவில் பேராலயத்தில் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில், முதன்மை குரு ரோலிங்டன், முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தில் பங்குதந்தை குமார்ராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குதந்தை அமல்ராஜ் தலைமையிலும், யூதாததேயூ ஆலயத்தில் பங்குதந்தை அருமைநாயகம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.சாயர்புரம் ஞானபிரகாசியார், ஆலயம் அன்னம்மாள் ஆலயங்களில் பங்குதந்தை சகாயஜஸ்டின் தலைமையிலும், ஸ்டேட் பாங்க் காலனி அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில் பங்குதந்தை ஜெரோசின்கற்றார் தலைமையிலும் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயத்தில் சேகர தலைவர் எமில்சிங் தலைமையிலும், மில்லர்புரம் புனித பவுலின் ஆலயத்தில் சேகர தலைவர் சைமன் தர்மராஜ் தலைமையிலும், வடக்கூர் பரிபேட்ரிக் இணை பேராலயத்தில் சேகர தலைவர் செல்வின்துரை தலைமையிலும், சண்முகபுரம் பரிபேதுரு ஆலயத்தில் திருமண்டல குருத்துவ செயலாளரும், சேகர தலைவருமான இம்மானுவேல் வான்ஸ்றக் தலைமையிலும், ஆசிரியர் காலனி பரி.திருத்துவ ஆலயத்தில் சேகர தலைவர் செல்வசிங் ஆர்தர் தலைமையிலும், சிதம்பரநகர் அபிஷேக நாதர் ஆலயத்தில் சேகர தலைவர் அதிசயராஜ் தலைமையிலும், போல்பேட்டை நல்மேய்ப்பர் ஆலயத்தில் சேகர தலைவர் மைக்கேல்ராஜ் தலைமையிலும், திரவியபுரம் சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் திருமண்டல உப தலைவரும், சேகர தலைவருமான தமிழ்செல்வன் தலைமையிலும், கிருஷ்ணராஜபுரம் எபநேசர் ஆலயத்தில் சேகர தலைவர் ஜேஸ்பர் அற்புதராஜ் தலைமையிலும் கேவிகே நகர் கிறிஸ்து ஆலயத்தில் சேகர தலைவர் ஜெபவாசகன் தலைமையிலும், சுப்பிரமணியபுரம் சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் சேகர தலைவர் டேவிட்ராஜ் தலைமையிலும், சாயர்புரம் திரித்துவ ஆலயத்தில் சேகர தலைவர் இஸ்ரேல் ராஜதுரைசிங் தலைமையிலும் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி விவிடிரோடு பகுதியில் உள்ள கிறிஸ்தவ விசுவாச ஜெனரல் அசெம்பிளி சபையில் தலைமை போதகர் பால் ஆண்ட்ரூ கனகராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தாளமுத்து நகர் ஆறுதலின் இயேசு பேராலயத்தில் சகோதரர் நெகேமியா, தீர்க்கதரிசி செல்வராணி ஆகியோர் பாடல், ஆராதனை நடத்தினர். பேராயர் நசரேன் ஈஸ்டர் சிறப்பு செய்தி அளித்தார். காந்திநகர் தோமையார் ஆலயத்தில் பங்குத்தந்தை மரியவளன் தலைமையில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது. தூத்துக்குடி கேவிகேநகர் ஐபிஎம் தலைமை சபையில் பேராயர் ஸ்டீபன் மற்றும் போதகர் சாம் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு பிரார்தனைகள் நடந்தன.

நாசரேத்: நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை தலைமைகுரு மர்காஷிஸ் டேவிட் தலைமையில் உதவிகுரு பொன்செல்வின், சபை ஊழியர்கள் ஜாண்சன், ஜெபராஜ் முன்னிலையில் நடந்தது. பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையிலும் பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சேகரகுரு கிராக்ஸ்லி தலைமையில் சபை ஊழியர் ஸ்டான்லி முன்னிலையிலும், மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் சேகரகுரு டேனியல் ஞானப்பிரகாசம் தலைமையில் சபை ஊழியர் எல்சின் தங்கத்துரை முன்னிலையிலும், வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் சபை ஊழியர் ஜாண்வில்சன் தலைமையிலும், பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் சேகரகுரு ஆல்வின் தலைமையிலும் ஆராதனை நடந்தது.

கடையனோடை தூய தோமான் ஆலயத்தில் சேகரகுரு ஆசீர் சாமுவேல் தலைமையிலும், மூலக்கரை தூய ஸ்தேவான் ஆலயத்தில் சபை ஊழியர் ராஜ்குமார் தலைமையிலும், திருமறையூர் மறுரூப ஆலயத்தில் சிறப்பு ஆராதனை, ஆயத்த ஆராதனை ஓய்வுபெற்ற குரு பொன்னுசாமி தலைமையில் சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் முன்னிலையில் வழிபாடு நடந்தது.
அதிகாலை 4.30 மணிக்கு பண்டிகை பரி.திருவிருந்து ஆராதனை ஓய்வுபெற்ற குரு எரேமியா தலைமையில் நடந்தது.

காலை 9 மணிக்கு பரி.திருவிருந்து ஆராதனை மதுரை-ராமநாதபுரம் திருமண்டல ஓய்வுபெற்ற குரு ஜான்தனசேகர் தலைமையில் சபை குரு (பொ) ஆல்வின் ரஞ்சித்குமார் முன்னிலையில் நடந்தது. குருவானவர்களுக்கு சபை மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் டிசி உறுப்பினர் தேவதாஸ், கமிட்டி உறுப்பினர்கள் பாக்கியநாதன், ஜீவன், ஆசீர், துரைராஜ், ஜான்சேகர், அகஸ்டின் செல்வராஜ், ஜோயல் கோல்டுவின், பிரவீன்குமார், பெஞ்சமின், புஷ்பலதா, சரோஜினி மற்றும் சபை மக்கள் பங்கேற்றனர்.

மணிநகர், வகுத்தான்குப்பம், வாழையடி, அகப்பைகுளம், வெள்ளமடம், ஒய்யான்குடி, பாட்டக்கரை, கச்சனாவிளை, நெய்விளை, நாலுமாவடி, தங்கையாபுரம், உடையார்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.ஆறுமுகநேரி: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு புன்னைக்காயல் தூய ராஜகன்னிமாதா ஆலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் இயேசுகிறிஸ்து உயிர்ப்பை நினைவு கூறும் வகையில் இறைவார்த்தை வழிபாடு, ஒளிவழிபாடு, நற்கருணை வழிபாடு நடந்தது. கிறிஸ்தவர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற திருமுழுக்கை மீண்டும் புதுப்பிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

நூற்றுக்கணக்கானவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர். ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிராங்ளின் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர். குளத்தூர்: குளத்தூரையடுத்த தருவைகுளம் தூயமிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இயேசு கிறிஸ்து மறித்து மறுதினம் உயிர்த்தெழுந்த நாளை கொண்டாடும் விதமாக கிறிஸ்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர்.

ஆலய பங்குதந்தை வின்சென்ட் தலைமையில் நடந்த திருப்பலியை தொடர்ந்து திருவிழிப்பு பிரார்த்தனைகள் நடத்தினார். இதில் பங்குதந்தைகள் அமலன், உதவி பங்குதந்தை விஷால் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இதேபோல் குளத்தூர் தூய கிறிஸ்து மறுரூபஆலயத்தில் பங்குதந்தை ஒபதியா செல்வராஜ் தலைமையில் திருப்பலி, சிறப்பு ஆராதனை, ஜெபமாலையுடன் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. வேம்பார் புனித தோமையார் ஆலயத்தில் பங்குதந்தைகள் அந்தோணிதாஸ், சகாயஜோசப் தலைமையில் நள்ளிரவு திருப்பலி, ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Related posts

ரிசல்ட் வருவதற்கு முன்பே தொண்டர்கள் மீது பழிபோட தயாராகும் இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

அமித்ஷாவுக்கு பாஜ நிர்வாகி எழுதிய கடிதத்தை வெளியிட்டு ராகுல் பிரசாரம்