பாம்பு கடித்து விவசாயி பலி

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணராஜ்குப்பம் ஊராட்சி கோரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்(56), விவசாயி. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது நடராஜனை பாம்பு கடித்தது. வீட்டிற்கு வந்து உறவினர்களுக்கு நடராஜன் தகவல் தெரிவித்தார். சிறிது நேரம் கழித்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக உறவினர்கள் நடராஜனை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நடராஜன் உயிரிழந்தார்.

இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் ‌இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கோரகுப்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக விவசாயத்திற்கு குறைந்தழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருவதால், விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வரும் நிலையில், நள்ளிரவில் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற நடராஜன் பாம்பு கடித்து இறந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

Related posts

சிவகங்கை அருகே அய்யனார் கோயில் விழாவில்  அதிர வைத்த ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 13 பேர் காயம்

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரிப்பு குற்றாலம் மெயினருவியில் இரவில் தடை; காலையில் அனுமதி

கடலாடியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்