கிருஷ்ணகிரி அருகே பாம்பு கடித்த பெண்ணுக்கு சிகிச்சை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி சித்ரா இவர் இன்று மாலை தனது வீட்டின் முன்பு தனது உறவினரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்பொழுது சித்ராவின் காலின் அருகே ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதை போன்று உணர்ந்துள்ளார். அதனை சித்ரா பார்த்தபொழுது பாம்பு ஒன்று சித்ராவை கடித்து விட்டு சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சித்ரா கத்தி அலறியுள்ளார்.

சித்ராவின் அழகில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடியுள்ளனர் அப்பொழுது சித்ரா பாம்பு கடித்ததை கூறியதின் பேரில் கடிதப் பாம்பை தேடி பிடித்து பிளாஸ்டிக் கவரில் போட்ட உறவினர்கள் சித்ராவையும் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடித பாம்பையும் பிளாஸ்டிக் கவரில் போட்டு சிகிச்சைக்காக நோயாளி கொண்டு வந்த நிலையில் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பாம்பை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அவர் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனைக்கு கடித்த பாம்பை பிளாஸ்டிக் கவறில் போட்டு சிகிச்சைக்காக கொண்டு வந்த பெண்ணால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்