கணவருடன் சேர்த்து வையுங்கள் குடும்ப நல நீதிமன்றத்தில் சின்னத்திரை நடிகை வழக்கு

சென்னை: பிரிந்து சென்ற கணவருடன் சேர்த்து வைக்க கோரி சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனியார் சேனல்களில் வெளியாகும் தொடர் நாடகங்களில் நடித்து வருபவர் நடிகை தீபா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. தன்னுடைய மகனுடன் தீபா சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில், சாய் கணேஷ் பாபு என்பவருடன் தீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாரியது.

இதையடுத்து, இருவரும் கடந்த ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர். தீபாவின் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், தீபாவை பிரிந்து கணேஷ் தனியாக வாழ்ந்து வருகிறார். இதையடுத்து, தன்னிடமிருந்து பிரிந்து வாழும் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், என்னுடைய கணவரின் சகோதரர் என்னை பல விதத்தில் துன்புறுக்கிறார்.

கணவனின் குடும்பத்தினர் என்னை சாதி ரீதியாக இழிவுபடுத்துகின்றனர். இதனால், எனக்கும் என்னுடைய கணவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு அவர் பிரிந்து சென்றிவிட்டார். நான் என்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகிறேன். எனவே, என்னை கணவருடன் சேர்த்து வைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

Related posts

தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: காவலர் பணி நீக்கம்

தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை பாமக தலைவணங்கி ஏற்கிறது: ராமதாஸ் அறிக்கை