தெரு நாய்களுக்கு ஏற்படும் தோல் நோய் குறித்து ஆய்வு செய்யப்படும்: ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தெரு நாய்களுக்கு ஏற்படும் தோல் நோய் குறித்து ஆய்வு செய்யப்படும் என ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துளர். சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய மண்டல குழு தலைவர் விஸ்வநாதன்; ஆந்திராவில் ஒரு பள்ளியில் தண்ணீர் குடிக்க தனி நேரம் ஒதுக்கப்படுகிறது. அதை போல சென்னை பள்ளிகளில் தனிநேரம் ஒதுக்க வேண்டும்.

கருத்தடை செய்த நாய்களுக்கு தோல் நோய் ஏற்படுகிறது. கருத்தடை செய்ய செலுத்தப்படும் மருந்தில் ஏதாவது பிரச்சனை உள்ளதா, அந்த சிகிச்சையில் என்ன பிரச்சனை என்பது குறித்து ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய ஆணையர் ராதாகிருஷ்ணன்: நாய்களுக்கு கருத்தடை செய்ய ஊசி போடும் முறை தற்போது இல்லை. கருத்தடையின் போது தடுப்பூசி போடப்படும். மற்ற நாய்களில் இருந்து நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம். இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.

Related posts

புதிய நூலகம் கட்டக் கோரிய வழக்கு: காவல்துறை தலைவருக்கு அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தை பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் கிளை ஆணை

உத்தரபிரதேச மாநிலம் மண்டோலா பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் டெல்லியில் மின்தடை: அமைச்சர் அதிஷி

2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சி என கூறிக்கொள்ளும் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது ஏன்? :பாஜக