சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை தீ விபத்தில் 3 பேருக்கு பலத்த தீக்காயம்… 2 பேர் மீது வழக்குப்பதிவு; ஊழியர் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள கங்கர்சேவல் கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த ராஜேந்திரராஜா என்பவருக்கு சொந்தமான ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற ஆலையில் 35க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது ஒரு அறையில் எதிர்பாராத விதமாக மருந்து உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன், ராஜா, முத்தம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தொழிலாளர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் ஒரு அறை முற்றிலும் சேதமானது. இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக ஆலையின் உரிமையாளர் ராஜேந்திர ராஜா, ஆலை போர்மேன் சக்கையா ஆகிய இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலை போர்மேன் சக்கையா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான உரிமையாளர் ராஜாவை போலீஸ் தேடி வருகிறது.

Related posts

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2507.47 புள்ளிகள் உயர்வு..!!

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசி மூலம் அமித்ஷா மிரட்டியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகார்