சிறுகளத்தூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

மதுராந்தகம்: செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சிறுகளத்தூர் கிராமத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த 2 தினங்களுக்கு முன்பு முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து 4ம் கால யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை ஆகியவை செய்யப்பட்டது. யாக சாலையில் இருந்து புனித நீரை, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. சிறுகளத்தூர், மதுராந்தகம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவர்கள் மீது கோபுர கலசங்களில் தெளிக்கப்பட்ட புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில், கலந்துகொண்டவர்களுக்கு அன்னதானம், குளிர்பானம் ஆகியவை வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் குழுவினர் செய்திருந்தனர்.

Related posts

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை உச்ச நீதிமன்றம் ஜூலை 10க்கு ஒத்திவைப்பு

சென்னையில் ஏடிஎம் மையம் வந்த வியாபாரியிடம் பணம் பறிப்பு!!

கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் : வானிலை ஆய்வு மையம்!!