சிங்கப்பூரில் கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழரான தங்கராஜு சுப்பையா தூக்கிலிடப்பட்டார்!!

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழரான தங்கராஜு சுப்பையா தூக்கிலிடப்பட்டார். கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சுமார் 1 கிலோ கஞ்சா கடத்தலை ஒருங்கிணைத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 9 ஆண்டுகள் சிறையில் இருந்த அவருக்கு 2018ம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.மனித உரிமை ஆர்வலர்கள், ஐரோப்பிய கூட்டமைப்பு குழு என பல தரப்பில் இருந்தும் தூக்கு தண்டனையை குறைக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை சிங்கப்பூர் அரசு நிராகரித்தது.

இந்த நிலையில், தங்கராஜு சுப்பையா இன்று அதிகாலை சாங்கி சிறையில் தூக்கிலிடப்பட்டார். சிங்கப்பூரில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் தூக்கு தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படுகிறது. இதற்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதை அரசு மறுபரிசீலனை செய்து வந்தது. இதனால் கடந்த 6 மாதங்களாக தூக்கு தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் தொடர அரசு முடிவு செய்தது. அதன்படி போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக தங்கராஜு சுப்பையாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கடுமையாக எடுத்து வரும் சிங்கப்பூர் அரசு, கடந்த ஆண்டு மட்டும் 11 பேரை இந்த வழக்கில் தூக்கில் போட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னையில் ஆம்புலன்ஸ் செவிலியரை கடித்த விஷப்பூச்சி!!

எல்லோரிடமும் ராகுல் காந்தி எளிமையாக பழகுவதால் புகழ்ந்தேன்: செல்லூர் ராஜூ

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கு: நாளை ஒத்திவைப்பு