சில்லி பாயின்ட்…

* உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் நகரில் நடைபெறும் ஆண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் 80 கிலோ எடை பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, இந்திய வீரர் ஆஷிஷ் சவுதாரி தகுதி பெற்றுள்ளார். ஈரான் வீரர் மெய்சம் கெஷ்லாகியுடன் நேற்று மோதிய ஆஷிஷ் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றார்.
* தாஷ்கன்ட்டில் நடக்கும் ஆசிய கோப்பை வில்வித்தை (2ம் கட்டம்) போட்டித் தொடரில் இந்திய அணியினர் 4 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்து அசத்தியுள்ளனர். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய வீரர், வீராங்கனைகள் 4 குழு பிரிவு அரையிறுதியிலும் அபாரமாக வென்று பைனலுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவுக்கு 4 பிரிவிலும் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
* காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாலேயே சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி பின்வரிசை பேட்ஸ்மேனாகக் களமிறங்கி வருகிறார். மேலும், இன்னிங்சின் நடு பகுதியில் ஸ்பின்னர்களை சமாளிப்பதை விட, கடைசி கட்டத்தில் வேகப் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு பவுண்டரி, சிக்சர் விளாசுவது அவருக்கு எளிதாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என, சென்னை அணி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
* மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சக ரஷ்ய வீரர் அஸ்லான் கரட்சேவுடன் நேற்று மோதிய நம்பர் 1 வீரர் மெத்வதேவ் 6-7 (1-7), 4-6 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

Related posts

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது