சி ல் லி பா யி ன் ட்…


* பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 4X400 தொடர் ஓட்டத்தின் பெண்கள், ஆண்கள் பிரிவில் பங்கேற்க தமிழகத்தின் சுபா வெங்கடேன், ஆரோக்கிய ராஜீவ் உள்ளிட்ட இந்திய அணி பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. பஹாமாசில் நடக்கும் தகுதிச் சுற்றின் ஆண்கள் பிரிவில் ஆரோக்கிய ராஜீவ், முகமது அனாஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம், 3.23 விநாடிகளில் இலக்கை எட்டி 2வது இடம் பிடித்தது. அமெரிக்கா முதல் இடம் பிடித்தது. மகளிர் 4X400 தொடர் ஓட்டத்தில் சுபா வெங்கடேசன், ரூபால், ஜோதிகா ஸ்ரீதண்டி, எம்.ஆர்.பூவம்மா ஆகியோர் அடங்கிய இந்திய அணியும் 2வது இடம் பிடித்து (3 நிமிடம், 29.35 விநாடி) ஒலிம்பிக் பங்கேற்பை உறுதி செய்தது.

* பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் கிரிஸ்டல் பேலஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைட்டட் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

* லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான போட்டி முடிந்ததும் கொல்கத்தா திரும்புவதற்காக விமானத்தில் புறப்பட்ட கேகேஆர் அணி வீரர்கள், கனமழை, மோசமான வானிலை காரணமாக வாரணாசியில் தங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருநாள் தாமதத்துக்குப் பின்னர் நேற்று அவர்கள் கொல்கத்தா திரும்பினர். கேகேஆர் தனது 12வது லீக் ஆட்டத்தில் மே 11ம் தேதி மும்பை இந்தியன்சை சந்திக்கிறது.

Related posts

டெல்லி மக்களிடம் மோடி எதை சொல்லி ஓட்டு கேட்கிறார்?.. கெஜ்ரிவால் ஆவேசம்

ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கும் கீழ் குறைந்த வெயில்