பெண்ணை கர்ப்பமாக்கிய எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்

காரைக்குடி: திண்டுக்கல் மாவட்டம், கருதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுமதி (35). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பேஸ்புக் மூலம் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் எஸ்.ஐ சிவக்குமாருடன் சுமதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவக்குமார் திருமணமானவர். காரைக்குடி வள்ளுவர் தெருவில் தனியாக வீடு எடுத்து சுமதியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

தற்போது சுமதி 8 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சிவக்குமார் தன்னுடன் வாழ மறுப்பதாகவும், அவரது குடும்பத்தார் மிரட்டுவதாக கூறி சுமதி நேற்று முன்தினம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதுதொடர்பான செய்திகள் வெளியானதை தொடர்ந்து எஸ்.ஐ சிவக்குமாரை நேற்று ராமநாதபுரம் சரக டிஐஜி துரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது