செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறை அருகே ஓடும் கழிவுநீர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நகரத்தின் மைய பகுதியில் செயல்பட்டு வருகிறது. செங்கல்பட்டை சுற்றியுள்ள ஏராளமான மக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றும் செல்கின்றனர். இதில் குறிப்பாக பாலூர், ஆத்தூர், திம்மாவரம், திருக்கழுகுன்றம், திருப்போரூர், கல்பாக்கம், மாமல்லபுரம், கூவத்தூர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், வந்தவாசி, உத்திரமேரூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதியில் இருந்து தினமும் பல ஆயிரகணக்கான மக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

இங்கு, சுமார் ஒரு நாளைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வந்து சிக்சை பெறுகின்றனர். இங்கு சர்க்கரை நோய், காசநோய், இதயநோய், விபத்து சம்பந்தமான அனைத்து சிகிச்சை மற்றும் கர்பிணிகளுக்கு பரிசோதனை உள்பட அனைத்துவகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புறநோயாளிகள் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கின்றனர். உள்நோயாளிகள் குறைந்தது சுமார் 5 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் என சுமார் 500 பேருக்கு மிகாமல் இங்கு பணியாற்றுகின்றனர்.

இந்த மருத்துவமனை வளாகத்தில் டீன் அறை, கொரோன பரிசோதனை மையம், பிரேத பரிசோதனை மையம் ஆகியவை உள்ளது. இதன் அருகே உள்ள கழிவறையை இங்குள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பயன்படுத்துகின்றனர். இங்கு கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு வெளியேறுகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் பிணவரை பகுதியில் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பிணவறை அருகே கடந்த ஒரு வாரமாக தேங்கி துர்நாற்றம் வீசிகிறது.

இந்த பிணவறைக்கு ஒரு நாளைக்கு சுமார் 100 முதல் 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்ல கூடிய பகுதியில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயத்தில் வருகின்றனர். எனவே, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் தனிக்கவனம் செலுத்தி மருத்துவமனையில் பல நாட்களாக தேங்கியுள்ள கழிவுநீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உறவினர்கள் மற்றும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related posts

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!