சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும் வகையில், செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!!

சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி இன்று தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது. மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். குளிர் பிரதேசங்களில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை சென்னையில் நடத்தினால் எப்படி இருக்கும் என்ற சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு, ஜூன் மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இதற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி இன்று தொடக்கி வைக்கப்பட்டது.

இந்த மலர் கண்காட்சியை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவுக்கு, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் எழிலன், துணை மேயர் எம்.மகேஷ்குமார், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் ஆபூர்வா உட்பட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி, கொடைக்கானல், குமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் எடுத்துவரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது. 10 லட்சம் மலர்கள் இந்த கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது.மலர் கண்காட்சி நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.150, குழந்தைகளுக்கு ரூ. 75 நிர்ணயம் செய்யப்படுகிறது.

Related posts

மதுரவாயல் அருகே பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் பெண் காயம்

நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க சாயில் நெய்லிங், ஹைட்ரோ சீடிங் முறையில் மலைச்சரிவில் புல் வளர்க்கும் தொழில் நுட்பம்

பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக கட்டிடத்தில் பொழுதுபோக்கு அரங்குகள் அமைக்க மாநகராட்சி முடிவு