வேட்பாளர் தேர்வு செய்ய முடியாமல் பேரம் நடத்துகிறது: மாஜி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று கூறுகையில், ‘புதுச்சேரியில் ஆட்சியில் இருப்பவர்களால் வேட்பாளரை முடிவுசெய்ய முடியவில்லை. புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி ரூ.50 கோடிக்கு விலை பேசப்படுகிறது. அந்த பணம் இருந்தால்தான் தேர்தலில் நிற்க வேண்டும் என்று பாஜ கட்சியில் பேரம் பேசுகிறார்கள். மக்களை நம்பாமல் பணத்தை நம்பியே அக்கட்சி தேர்தலில் நிற்கிறது. ஊழல் செய்யாத கட்சி எனக்கூறும் பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் ரூ.6,600 கோடி கிடைத்துள்ளது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை வைத்து பாஜ பணம் சேர்த்துள்ளது.

இது மோடி அரசின் இமாலய ஊழல். இந்த பணத்தை வைத்து தேர்தலுக்காகவும், மாற்று கட்சிக்காரர்களை தன்பக்கம் இழுக்கவும், எதிர்க்கட்சிகளை கவிழ்க்கவும் பயன்படுத்துகின்றனர். இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு இரிடியம் கடத்துவதாக தகவல் வந்துள்ளது. மத்திய அரசின் அனுமதி பெறாமல் ஒரு அமைச்சர் 17 முறை சிங்கப்பூருக்கும், 11 முறை மலேசியாவிற்கும் சென்றுள்ளார். அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல வேண்டும். இது மர்மமாக உள்ளது. எப்படி அவர் செல்லலாம். அதற்காக அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என்றார்.

 

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்