திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு சேதுபாவாசத்திரம் வட்டார ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தேர்வு

பேராவூரணி : தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின், சேதுபாவாசத்திரம் வட்டார கிளையின் பொறுப்பாளர்கள் தேர்வு பூக்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. தேர்தல் ஆணையராக பேராவூரணி வட்டாரப் பொருளாளர் செல்லத்துரை, துணை தேர்தல் ஆணையராக முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நீலகண்டன் ஆகியோர் செயல்பட்டு தேர்தலை நடத்தினர். வட்டாரத் தலைவராகமகேந்திரன், செயலாளராக சந்திரசேகர், பொருளாளராக திருஞானவேல், துணைத் தலைவர்களாக அன்பழகன், சண்முகவல்லி, துணைச் செயலாளர்களாகமுத்துக்குமார், நீலா மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக சத்தியமூர்த்தி, பரமசிவம், அன்பழகன், செந்தாமரைஉள்ளிட்டோர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டார பொறுப்பாளர்களுக்கு மாவட்டச் செயலாளர் குழந்தைசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் .

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்