செய்யாறு அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங்: ஜூனியர்களை சாட்டையால் அடிக்கும் சீனியர் மாணவர்கள்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் சீனியர் மாணவர்கள் சிலர் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து சாட்டையால் அடித்து தண்டனை வழங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி விடுதியில் 3ம் ஆண்டு படித்து வரும் சீனியர் மாணவர்கள் சிலர் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து சாட்டையால் அடித்து தண்டனை வழங்குவதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உண்மையில் துன்புறுத்தப்பட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும். ஜூனியர்களை, சீனியர் மாணவர்கள் சாட்டையால் அடிக்கும் வீடியோ அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வாக்குப் பதிவில் முறைகேடு பீகாரில் தேர்தலுக்கு பின் பாஜ, ஆர்ஜேடி ஆதரவாளர்கள் மோதல்: ஒருவர் பலி, 3 பேர் காயம்

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தொடரும்: மெகபூபா உறுதி

ஐதராபாத்தை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!