அருந்ததியர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் சீமான் இன்று ஆஜர்: ஆக.10ல் மீண்டும் ஆஜராக உத்தரவு

ஈரோடு: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்டோபர் 10ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13ம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சீமான் மீது எஸ்சி, எஸ்டி, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கில் விசாரணைக்காக, இன்று காலை ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். முதன்மை நீதிபதி முருகேசன், இன்று விடுமுறை என்பதால் பொறுப்பு நீதிபதி மாலதி முன்னிலையில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகுமாறு விசாரணையை ஒத்திவைத்தார். இந்நிலையில் சீமானுக்கு, இரு நபர் உத்தரவாதத்துடன் ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மேலும் வழக்கு விசாரணை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து மீண்டும் ஆஜராக உத்தரவிட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்; நான் உண்மையை தான் பேசுவேன், ஓட்டுக்காக நிற்காமல் நாட்டுக்காக நிற்கிறேன். வாக்குகளுக்காக நாம் தமிழர் கட்சி ஒருபோதும் பேசாது என கூறினார்.

Related posts

கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி திமுக மனு..!!

பலாத்கார வழக்கு: கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி ஜாமின் கோரி மனு

ஜூன் 3-க்குள் ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு..!!