சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

*சுத்திகரிப்பு குடிநீர் குழாய் அமைக்க கோரிக்கை

தண்டராம்பட்டு : சுட்டெரிக்கும் வெயில் எதிரொலியாக சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. மேலும், சுத்திகரிப்பு குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். பொன்விழா கண்ட இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. 118 அடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாய பாசனத்திற்காக வலது புறம், இடது புறம் தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சாத்தனூர் அணையில் தற்போது 80 அடியாக நீர்மட்டம் குறைந்தது. இதனால் சாத்தனூர் அணை குட்டை போல காட்சியளிக்கிறது.

இந்த அணையில் இருந்து திருவண்ணாமலை நகராட்சி புதுப்பாளையம், தானிப்பாடி, லாடாவரம், செங்கம் பால் பண்ணை உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது கோடை வெயில் 105 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. இதனால் நேற்று விடுமுறை தினத்தில் சாத்தனூர் அணையை சுற்றிப் பார்க்க குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், தற்போது கோடை வெயில் அதிகரித்து காணப்படுவதால் சுத்திகரிப்பு குடிநீர் குழாய் அதிக இடங்களில் அமைக்க வேண்டும். செயற்கை நீரூற்று காலை முதல் மாலை வரை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு; மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்: யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பூமியை தாக்கிய சூரிய புயல் சூரிய காந்தப்புயலின் தரவுகளை சேகரித்த இஸ்ரோ: விஞ்ஞானிகள் தகவல்