எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறை ஒன்றிய அரசை கண்டித்து 18ல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் வெளியிட்ட அறிக்கை: கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழ கங்கள், ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் பயின்ற எஸ்சி, எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 13 ஆயிரத்து 626 பேர் சாதிய பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கல்வியைத் தொடர முடியாமல் பாதியில் வெளியேறியதாக மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பயனால் இப்போதுதான் படிப்படியாக ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறி வருகிறார்கள். இந்த சூழலில் முதுகலைப் படிப்பு வரை படிக்க முடியாத சூழலை பா.ஜ.க. அரசே ஏற்படுத்துகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்த அராஜக செயலை கண்டித்து கோவையில் 18ம் தேதி எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொள்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

முல்லைப் பெரியாறு அணையில் இன்றும், நாளையும் 2 நாட்கள் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு..!!

குவைத் தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தது உறுதி!!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறால் விமானம் தாமதம்: பயணிகள் தவிப்பு