சித்ரா பவுர்ணமியையொட்டி ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை

மதுராந்தகம்: கருங்குழி ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில், சித்ரா பவுர்ணமியையொட்டி சத்யநாராயண பூஜை நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் சித்திரை பவுர்ணமியையொட்டி யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 9 ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன சித்தர் யோகிரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 108வது பௌர்ணமி தரிசனம் நடைபெற்றது. நேற்று காலை 11 மணி முதல் 12 மணி வரை சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் தங்கள் கரங்களால் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனைவுடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசியை பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து, மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு, ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாராயண பூஜை செய்து, மகா தீப ஆராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநில கல்லூரி முன்னாள் முதல்வர் பத்மினி, பாரத் மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வர் ஜெயலட்சுமி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தரணிதரன், விழுப்புரம் முன்னாள் டிஎஸ்பி செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கு, கருங்குழி மட்டுமின்றி செங்கல்பட்டு, சென்னை, புதுசேரி, பெங்களுரு, கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சித்தரிடம் ஆசிபெற்று சென்றனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை யோகி ரகோத்தமா சுவாமிகள் அறக்கட்டளை முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில் செய்திருந்தனர்.

Related posts

பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு; மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்: யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பூமியை தாக்கிய சூரிய புயல் சூரிய காந்தப்புயலின் தரவுகளை சேகரித்த இஸ்ரோ: விஞ்ஞானிகள் தகவல்

சொன்னதை செய்வோம்- செய்ததை சொல்வோம்’ என்பது கலைஞரின் கொள்கை முழக்கம்; சொல்லியதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது