கடமலைக்குண்டு அருகே மேகமலை வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்படும் விலங்குகள்

*கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டுகோள்

வருசநாடு : கடமலைக்குண்டு அருகே வனப்பகுதிகளில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகின்றனர்.கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டி மலை அடிவாரத்தில் மேகமலை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் இருப்பதால் வனவிலங்குகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாய நிலை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குப்பை கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இது சம்பந்தப்பட்ட பணிகளை வனத்துறை அதிகாரிகளும் ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பல வன விலங்குகள் உயிர் பலி ஏற்படும் நிலையும் உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் கிராமவாசிகள் கூறுகையில், ‘‘கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கிறது. இதனை வனத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே மாவட்ட வன அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும். மேலும் வனத்துறை சார்பில் முள்வேலிகள் அமைத்து வனவிலங்குகளை பராமரிக்க வேண்டும்’’என்றனர்.

Related posts

யானை வழித்தடத்தில் உள்ள மின் வயர்களின் உயரங்களை அதிகப்படுத்தக் கோரி வழக்கு..!!

சென்னையில் உபா சட்டத்தில் 6 பேர் கைது.. மத்திய உள்துறைக்கு பறக்கும் ரிப்போர்ட் : விசாரணையை கையில் எடுக்கிறதா என்ஐஏ!

கிளாம்பாக்கம் ஆம்னி பேருந்து நிலையம் தயார்: ஜூன் 1-ல் இருந்து ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்