சேலம் சரக பெண் போலீசாருக்கு துப்பாக்கி சுடும்போட்டி

சேலம்: சேலம் சரக பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி சேலத்தில் இன்று துவங்கியது. காவலர்கள் முதல் போலீஸ் அதிகாரிகள் வரையிலான துப்பாக்கி சுடும் போட்டி சேலம் நாமமலை அடிவாரம் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் இன்று காலை துவங்கியது. சேலம் சரகம், ஈரோடு மாவட்டம் மற்றும் போச்சம்பள்ளி பட்டாலியன் ஆகிய இடங்களில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கான போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியை சேலம் மாவட்ட எஸ்.பி. சிவக்குமார் நடத்துகிறார். இதில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர் லாவண்யா மற்றும் பெண் போலீசார் கலந்து கொண்டனர். நாளை அனைத்து தரப்பினருக்கான போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படுவதுடன், மாநில அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.

Related posts

சொல்லிட்டாங்க…

தாமரை தரப்பின் துரோகமே பலா பழத்துக்கு ஓட்டுக்கள் வராததற்கு காரணம் என தர்மயுத்தம் புலம்பி தவிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கனடாவில் இந்தியர் சுட்டுக் கொலை: 4 பேர் கைது