தியாகதுருகம் சுற்றுவட்டாரத்தில் தொடரும் கோடை மழை: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வீணானதால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சுற்றுவட்டாரத்தில் கோடை மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி உள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். தியாகதுருகம் அடுத்த கூத்தக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேலாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அடியோடு சாய்ந்து வீணாகியுள்ளது.

நெல்மணிகள் மழை நீரில் நனைந்து முளைக்க தொடங்கி இருப்பதால் விவசாயிகள் செய்வதறியாமல் பரிதவித்து வருகின்றனர். கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.30,000 செலவிட்டதாக கூறும் விவசாயிகள் மழையால் தங்களது எதிர்காலமே கேள்விக்குறியாகி இருப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர். வாய்க்கால்கள் புதர்மண்டி கிடப்பதால் வயல்களில் இருந்து தண்ணீர் வெளியேற வழியின்றி குளம் போல காட்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே தங்களால் விவசாயத்தை தொடர முடியும் என கூத்தக்குடி விவசாயிகள் கூறுகின்றனர்.

Related posts

பலாப்பழத்தை பறிக்க மரத்தை முட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்து காட்டு யானை பலி

கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு

பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம்; ரூ.100 கோடி தருவதாக கூறினேனா?: டி.கே.சிவகுமார் ஆவேசம்