சச்சின்: 50

மாஸ்டர் பேட்ஸ்மேன், சாதனை நாயகன் சச்சின் இன்று தனது 50வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடுகிறார். கிரிக்கெட் வரலாற்றில் ஈடு இணையற்ற சாதனைகளை படைத்து உலக அளவில் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்த சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அவரது பல சாதனைகள் இன்றைய வீரர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் லட்சிய இலக்குகளாக விளங்கி வருகின்றன. சர்வதேச போட்டிகளில் 100 சதங்களை விளாசியுள்ள அந்த மகத்தான வீரருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பிறந்தாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வாங்கடே ஸ்டேடியத்தில் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடுகிறார் சச்சின்.

* நூல்வாழ்த்து!

கோழிக்கோடு, மலபார் கிறித்துவக் கல்லூரி நூலகத்தில் ‘சச்சின்ஸ் கேலரி’ என்ற பெயரிலேயே தனிப்பிரிவை அமைத்து அதில் அவர் தொடர்பான புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளனர். வரலாற்றுத் துறை பேராசிரியர் வசிஷ்ட் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் 50 மாணவர்கள் சச்சின் பற்றிய புத்தங்களை ஏந்தி உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்.

Related posts

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

கொடைக்கானல் படகு போட்டி ரத்து

விராலிமலையில் 10 செ.மீ. மழை பதிவு