ரஷ்யாவின் புகழ்பெற்ற பேலட் நடனத்தில் அசத்தும் சிறுமி: உலக சாதனைக்காக தொடர் முயற்சி

கும்பகோணம்: கும்பகோணத்தில் ரஷ்யாவின் புகழ்பெற்ற பேலட் நடனத்தில் அசத்தி வரும் 14 வயது சிறுமி, உலக சாதனைக்காக தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே காவனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அமுதா. இவரது மகள் ரோஷினி (14) மற்றும் மகன் சித்தார்சன் (9). அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் ரோஷினி, ரஷ்யாவின் புகழ்பெற்ற பேலட் நடனத்தை பின்பற்றி கால் விரல்களை மடக்கி பாதம் தரையில் படாதபடி புதிய பாணியில் நடனம் ஆடி வருகிறார்.

இந்நிலையில், கும்பகோணத்தில் உள்ள தனியார் மஹாலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி ரோஷினி, திரை இசை பாடலுக்கு கால்விரல்களை மடக்கி ஆடும் ரஷ்யாவின் பேலட் நடனத்தை ஆடினார். அப்போது பலரும் வெகுவாக கைத்தட்டி ரசித்து ஆரவாரம் செய்தனர். இதுபற்றி சிறுமி ரோஷினி கூறுகையில், ‘ரஷ்யாவில் கால்களில் ஷூ அணிந்து இந்த நடனத்தை ஆடுவார்கள். ஆனால், நான் ஷூ அணியாமல் ஆடி வருகிறேன்.
தற்போது, கால் விரல்களை மட்டும் பயன்படுத்தி பரதம் மற்றும் நாட்டுப்புற கலைகள் தொடர்பான நடனமும் கற்று வருகிறேன். இந்த நடனத்தில் உலக சாதனை படைப்பது தான் என்னுடைய குறிக்கோள். என் நடனத்தை பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் உதவிட வேண்டும்’ என்றார்.

Related posts

குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிப்பு; தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து!

உலக செவிலியர்-அன்னையர் நாள்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து

சேலத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி