ஓடும் பைக்கில் ‘ரொமான்ஸ்’ இறுக்கி அணைச்சு ஒரு உம்மா… அபராதம் போட்ட போலீஸ்

உத்தர பிரதேசம் மாநிலம், காசியாபாத் பகுதியில் ஒரு பைக்கில் வாலிபரின் மடியில் ஒரு இளம்பெண் அமர்ந்து கொண்டு செல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பின்னால் காரில் வந்தவரின் வீடியோ எடுத்து உள்ளார். அதில், பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்த இளம்பெண், வாலிபரின் மடியில் ஏறி, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ‘ரொமான்ஸ்’ செய்வது போன்ற காட்சிகள் இருந்தன. இந்த வீடியோவில் உள்ளது யார் என்று பைக் எண்ணை வைத்து காசியாபாத் போலீசார் விசாரித்தனர். பின்னர், அந்த பைக் உரிமையாளரை வரவழைத்து அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்