தேர்தல் நெருங்க நெருங்க ஜூரம் வந்திடுச்சு..10 ஆண்டு பிரதமர் மோடி யாருக்கு பேன் பார்த்தார்?கச்சத்தீவு விவகாரத்தில் முத்தரசன் ‘சுளீர்’

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன் நேற்று திறந்த வேனில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: இன்றுவரை பாஜவை விமர்சனம் செய்து பேச மாட்டேன் என்கிறார் எடப்பாடி. அதனால் தான் கள்ள கூட்டணி என்று குறிப்பிடுகிறோம்.

தேர்தல் நெருங்க நெருங்க நரேந்திர மோடிக்கு ஜுரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மோடி சட்டப்பூர்வமாக கச்சத்தீவை மீட்டிருக்கலாம். ஆனால் அவர் மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் திமுக இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்து விட்டதாக கூறி பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார். இந்த 10 ஆண்டு காலம் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார் என தெரியவில்லை. இவ்வாறு பேசினார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்