ராயல் என்பீல்டு இன்டர்செப்டர்

ராயல் என்பீல்டு நிறுவனம், இன்டர்செப்டர் பியர் 650 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் 648 சிசி பேரரல் டிவின் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். இது அதிகபட்சமாக 47 எச்பி பவரையும், 52.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த நிறுவனத்தின் 650 சிசி பைக் வரிசையில் உள்ள மெட்டியோர், ஷாட்கன் பைக்குகளில் உள்ளது போன்று சஸ்பென்க்ஷன் இடம் பெற்றிருக்கும். ஹிமாலயன் பைக்கில் உள்ளது போன்று டிஸ்க் பிரேக் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டில் இது சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் உள்ள என்பீல்டு இன்டர்செப்டர் ஷோரூம் துவக்க விலை சுமார் ரூ.3.63 லட்சம்.

Related posts

அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வோருக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு தகவல்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு!

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட்