சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் சாலை பணி டெண்டரை பிப்.15-க்குள் வெளியிட நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு..!!

சென்னை: சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் சாலை பணி டெண்டரை பிப்.15-க்குள் வெளியிட நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து சாலைகளையும் சீரமைக்க மாநகராட்சி சார்பில் ரூ.810 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் சாலை பணி டெண்டரை பிப்ரவரி 15 க்குள் வெளியிட நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் ரூ.250 கோடி, நகராட்சி நிர்வாக துறையில் ரூ.228 கோடி அளவுக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி இயக்குநரகம் சார்பில் ரூ.38 கோடி என ரூ.500 கோடி அளவுக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரை பிப்ரவரி 15க்குள் வெளியிட நகராட்சி நிர்வாகத்துறை அறிவுறுத்தியுள்ளது. டெண்டரை குறிப்பிட்ட காலத்தில் வெளியிட்டு சேதமான சாலைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.