சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது வேன் மோதி டிரைவர் பரிதாப பலி: மெட்ரோ ரயில் ஊழியர்கள் 2 பேர் படுகாயம்

அண்ணாநகர்: சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் மெய்யிறை (39), இவர், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில், கட்டுமான பணிக்காக, மெட்ரோ ரயில் ஒப்பந்த ஊழியர்களான பாலச்சந்திரன் (26), ரமணா (28) ஆகியோரை வேனில் ஏற்றி கொண்டு சூளைமேடு புறப்பட்டார்.

கோயம்பேட்டில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே சென்றபோது, சாலை ஓரத்தில் பழுதாகி நின்ற குடிநீர் லாரியின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக வேன் பயங்கரமாக மோதியது. இதில், வேனின் முன்பகுதி கண்ணாடி நொறுங்கியது. படுகாயமடைந்த மெய்யிறை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பாலச்சந்திரன், ரமணா ஆகியோர் காயமடைந்தனர்.

தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மெய்யிறையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த பாலச்சந்திரன், ரமணா ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குபதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் (29) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வள்ளியூர் ரயில்வே தரைப்பாலத்தில் அரசு பேருந்து சிக்கியது

சீர்காழி அருகே 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது