செய்யூர் அருகே பரபரப்பு வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு

செய்யூர்: செய்யூர் அருகே கழுத்தில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலத்தை போலீசார் மீட்னர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி ஓதியூர் கிராமத்தில் மாதா கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளம் அருகே நேற்று காலை கழுத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது.

இது குறித்து அப்பகுதிவாசிகள் கொடுத்த தகவலின் பேரில், செய்யூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு குளக்கரை அருகே இறந்து கிடந்த ஆணின் சடலம் குறித்து விசாரித்தனர். அதில், அவர் திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சோழராஜன் (40) என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த சடலத்தை போலீசார் மீட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எதற்காக இந்த பகுதிக்கு வந்தார், ரியல் எஸ்டேட் விற்பனை தொடர்பாக அவரை யாரேனும் வெட்டி கொலை செய்துவிட்டு, இங்குள்ள குளக்கரையில் போட்டுவிட்டு சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த வழக்கு தொடர்புடைய மர்ம கும்பலையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம், எம்.பி.யாக மட்டும் தொடர விருப்பம் என நடிகர் சுரேஷ்கோபி பேட்டி

நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தும் மத்திய அரசு?.. இன்று நடைபெறும் அமைச்சரவை ஒப்புதல் என தகவல்

கோவில்பட்டியில் 2வது முறையும் கைவரிசை ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.7.5 லட்சம் நகை, பணம் கொள்ளை