ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சென்னை சுற்றுலா பயணி மீட்பு

சென்னை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சென்னை சுற்றுலா பயணியை, இளைஞர்கள் மீட்டனர். சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் ரகு(50), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம், தனது நண்பர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, அருவியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்த ரகு, காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். நீச்சல் தெரிந்த அவர், தண்ணீர் செல்லும் போக்கில் சுமார் 100 மீட்டர் தூரம் வரை, நீச்சல் அடித்துக் கொண்டு தத்தளித்தார். தொடர்ந்து தொங்கு பாலத்தின் அடியில் இருக்கும் பாறையை கெட்டியாக பிடித்துக் கொண்டு, காப்பாற்றும்படி உதவி கேட்டு கூச்சலிட்டார். அப்போது, பென்னாகரம் அருகே பெரும்பாலையைச் சேர்ந்த சரவணன், சிபிராஜ், சேகர், அரவிந்த்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் சிலர், ஆற்றில் பாய்ந்து, தண்ணீரில் தத்தளித்த ரகுவை பத்திரமாக மீட்டு, பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர். துரிதமாக செயல்பட்டு அவரை பத்திரமாக மீட்ட இளைஞர்களுக்கு அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related posts

நாய் கடித்து 15 பேர் காயம்

10 ஆண்டு ஆட்சியில் இருந்தபோது கண்டு கொள்ளாமல் மதுரை எய்ம்ஸ் பணி துவங்க அதிமுக சார்பில் போராட்டமாம்…: ராஜன் செல்லப்பா லக…லக…

சொல்லிட்டாங்க…