கருங்குழி பேரூராட்சியில் ரூ.78 லட்சத்தில் தார் சாலை சீரமைப்பு


மதுராந்தகம்: தினகரன் செய்தி எதிரொலியாக, கருங்குழி பேரூராட்சியில் நபார்டு வங்கி நிதி உதவி ரூ.78 லட்சம் மதிப்பில் தார் சாலை சீரமைக்கும் பணி மும்மரமாக நடந்து வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சியில் உள்ள மலைப்பாளையம், அக்ரகாரம், பங்களா காலனி, அனுமந்தகுப்பம், மலைநகர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் தார் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டு குழியுமாக இருந்தது.

இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். மேலும் அவர்களது வாகனம் பழுதடைகிறது எனவும் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் மழைநீர் அந்த சாலையில் உள்ள பள்ளங்களில் குளம் போன்று தேங்கி நின்றதை தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. மேலும், இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை அடுத்து, பேரூராட்சி தலைவர் தசரதன், துணை தலைவர் சங்கீதா சங்கர், பேரூராட்சி செயல் அலுவலர் அருண்குமார், திமுக பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில், நபார்டு வங்கி நிதி உதவி ரூ.78 லட்சம் மதிப்பில் சேதம் அடைந்த தார் சாலையை சீரமைப்பதற்காக தற்போது பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுத்து அகற்றிவிட்டு புதிய தார்சாலை அமைக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Related posts

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை