மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான ஏர்வாடி கோயில் திருவிழா; தர்ஹாவை சுற்றி வந்த முளைப்பாரி ஊர்வலம்: இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு

கீழக்கரை: ஏர்வாடி கோயில் விழாவில் தர்ஹாவை சுற்றி வந்த முளைப்பாரி ஊர்வலத்திற்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி வாழ வந்த அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை அம்மன் கரகம் எடுத்து பக்தர்கள் கோயிலை அடைந்தனர்.

அங்கு பெண்கள் முளைப்பாரி சுமந்து கோயிலை வலம் வந்தனர். நேற்று காலை அம்மன் கரகம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பெண்கள் பொங்கலிட்டும், மாவிளக்கிட்டும், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி அம்மனை வழிபட்டனர். மாலையில் வாலிபர்களின் ஒயிலாட்டம் நிறைவுக்கு பின் 450க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி சுமந்து அம்மன் கரகத்துடன் ஊர்வலம் வந்தனர்.

ஏர்வாடி தர்ஹாவை மூன்று முறை வலம் வந்த முளைப்பாரி ஊர்வலத்திற்கு சிறப்பு துவா செய்யப்பட்டு சமூக நல்லிணக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் முளைப்பாரியை பக்தர்கள் சின்ன ஏர்வாடி கடலில் கரைத்தனர். ஆக.1ல் குளுமை பொங்கலுடன் விழா நிறைவடைகிறது.

Related posts

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் ஆலையை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியது வின்பாஸ்ட் நிறுவனம்..!!

மற்றொரு ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு; ரூ.50,000 கோடியில் 26 ரபேல் விமானங்கள்: பிரான்ஸ் குழு நாளை இந்தியா வருகை

அயோவாவில் பறவைக் காய்ச்சல்: 42 லட்சம் கோழிகள் அழிப்பு