மின் செலவை குறைக்க விரும்பினால் மாநகராட்சிகள் சொந்த நிதியில் சோலார் பேனல் அமைக்கலாம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம்‌(திமுக) கேள்வி: நாமக்கல் நகராட்சியில் மாதம் ஒன்றுக்கு ரூ.75 லட்சம் மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. எனவே சூரிய ஒளி மின் சக்தி உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் கே.என்.நேரு: நாமக்கல்லில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நகரின் மையப்பகுதியில் போகும் ஆறு என்றாலும் அது நீர்வளத் துறைக்குச் சொந்தமானது. மழை நீர் கால்வாயை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை எனவே சம்பந்தப்பட்ட துறையிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் சோலார் பேனல் அமைப்பது என்பது அரசு சார்பில் முன்னெடுக்கப்படுவதில்லை, நகராட்சி மற்றும் மாநகராட்சி சார்பில் அவர்களது சொந்த நிதியில் தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். நாமக்கல் நகராட்சியின் சொந்த நிதியில் சோலார் பேனல் அமைத்துக் கொள்ளலாம்.

  • அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் அறிவிப்பு நில அதிர்வு ஆய்வறிக்கைக்கு பிறகு அரசு நடவடிக்கை
    வேடசந்தூர் திமுக எம்எல்ஏ எஸ்.காந்திராஜன் (திமுக): திண்டுக்கல், வேடசந்தூர் மற்றும் நத்தம் பகுதியில் நில அதிர்வு ஏற்படுகிறது. திடீர் திடீரென வெடி விபத்து கேட்கிறது என்று கூறினார்.
    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து கலெக்டர் இருந்து அறிக்கை பெறப்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் இயக்குனரிடம் பாதிக்கப்பட்ட இடத்தில் குழு அமைத்து ஆய்வு செய்ய கோரப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை மைய இயக்குனர், வேலூர் வி.ஐ.டி. காலநிலை மற்றும் பேரிடர் தணிப்பு மைய இயக்குனரிடமும் நில அதிர்வு குறித்து ஆய்வு செய்ய கோரப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கடந்த ஆண்டில் 15 முறை அதிர்வு ஏற்பட்டுள்ளது. கனிம சுரங்கம் இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. அப்படி எதுவும் இல்லை. இருப்பினும் அந்த சத்தம், அதிர்வு எதனால் வந்தது என்பது குறித்து ஆய்வறிக்கை வந்த பிறகு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம்.
  • திண்டுக்கல் முதல் குமுளி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக மாற்ற வேண்டும்: n ஓபிஎஸ் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்
    பேரவையில் கேள்வி நேரத்தின்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை செல்கின்ற சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம் செய்யப்பட்டு, 4 வழிச்சாலையாக மாற்றுவதற்காக அரசாணை போடப்பட்டது. அந்த வழித்தடத்தில் 9 புறவழிச்சாலைகள் இருக்கிறது. ஆனால் அந்த சாலை இரு வழிச்சாலையாக உயர்த்தப்பட்டு புறவழி சாலை போடப்பட்டுவிட்டது. 4 வழிச்சாலையாக போடப்படாதால் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ளது. இது இரு மாவட்டங்கள் மட்டுமில்லாமல் இரு மாநிலங்கள் இணைக்கின்ற சாலையாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சாலை மிகவும் அவசியமான சாலை, இதை 4 வழிச்சாலையாக மாற்றி தருவதற்கு அமைச்சர் முன்வர வேண்டும்.
    அமைச்சர் எ.வ.வேலு: உறுப்பினர் ஏற்கனவே முதல்வராக இருந்தவர். துறையின் அமைச்சராகவும் இருந்தவர். அவருக்கு எல்லா விவரங்களும் தெரியும். தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக மாற்ற வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக உள்ளது. அவருடைய கேள்வியை மையப்படுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, போக்குவரத்து சீர்கேடுகள் அதிகமாக இருப்பதால் அதை 4 வழிச்சாலையாக ஆக்குவது தான் சால சிறந்தது. இது குறித்து அரசு அனைத்து முயற்சியும் எடுக்கும்” என்றார்.
  • பேரவையில் இன்று காவல் துறை மீதான விவாதம்
    சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். கேள்வி நேரம் முடிந்ததும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கும். இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவர். இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (21ம் தேதி) சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று பேசிய உறுப்பினர்களுக்கு பதில் அளித்து பேசுவார். இதைத்தொடர்ந்து காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்