ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாடு அணி அபார வெற்றி

கோவை: ரயில்வேஸ் அணியுடனான ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு அணி 129 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் ஜெகதீசன் 245* ரன் விளாசினார். பூபதி குமார் 67, கேப்டன் சாய் கிஷோர் 59 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ரயில்வேஸ் முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு சுருண்டது. பிரதம் சிங் 92 ரன் எடுத்தார். ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை விளையாடிய ரயில்வேஸ் அணி 114 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தமிழ்நாடு பந்துவீச்சில் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன் வித்தியாசத்தில் வென்று 7 புள்ளிகளை பெற்றது. ஆட்டநாயகனாக ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டார்.

Related posts

மாணவி ஷரினாகிறிஸ்டுக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணையினை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது