ராமதாஸ் வலியுறுத்தல் அரசுப்பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் : தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் வாட்டி வரும் நிலையில், பெரியவர்களே வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தும் சூழலில், அரசுப் பள்ளிகளை ஜூன் 1ம் தேதி திறப்பது என்பது உகந்தது அல்ல.

ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு ஒரு மாதம் மட்டுமே விடுமுறை அளித்து ஜூன் முதல் நாளிலேயே திறப்பது நியாயமற்றது. மாணவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறப்பை தீர்மானிக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் திறப்பை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்.

Related posts

வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்: பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது

தென் மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது: இந்திய வானிலை மையம் அறிவிப்பு