ராஜிவ் காந்தி மருத்துவமனையில் படுக்கைகள் தயார்

சென்னை: ஒடிசா ரயில் கோர விபத்தில் சிக்கி ஏராளமானோர் பலியானானார்கள். சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயிலில் சுமார் 800 பேர் சென்னை வர டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னைக்கு சிறப்பு ரயில் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை வரும் அவர்களுக்கு ரயிலிலேயே மருத்துவ சிகிச்சை வழங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து சிறுவன் பலி: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் வேன் கவிழ்ந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

5 நாட்கள் கொடைக்கானல் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்