ராஜபாளையம் அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் இஎஸ்ஐ காலனியில் பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ சந்தன முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா மற்றும் பூக்குழி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டு திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் அம்மனுக்கு பால், பன்னீர், தேன் போன்ற 16 வகை அபிஷேகங்கள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பால்குடம் ஊர்வலம், முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் விழா இன்று அதிகாலை 7 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று, முளைப்பாரி கரகம் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் சுப்புராம், செயலாளர் கண்ணன், பொருளாளர் மணிகண்டன் மற்றும் கோயில் திருவிழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related posts

இரு மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேகதாது திட்டம் தொடங்கப்படும்: ஒன்றிய அமைச்சர் சோமண்ணா பேட்டி

வலுவான கூட்டணி ஆட்சி இருக்கிறது பொது சிவில் சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்: ஒன்றிய சட்ட அமைச்சர் பேச்சு

நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்களின் சிலைகளுக்கான உத்வேக ஸ்தலம் வளாகம் திறப்பு: ஒருதலைப்பட்சமான முடிவு என காங். தாக்கு