தொடர் மழையால் சதுரகிரி மலைக்கு செல்ல தடை: அமாவாசை என்பதால் மலையடிவாரத்தில் கூடிய பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: தொடர் மழையால் சதுரகிரி மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் அமாவாசை என்பதால் மலையடிவாரத்தில் பக்தர்கள் கூடியுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குதொடர்ச்சிமலை பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் இந்த கோவிலுக்கு தமிழ் மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, பௌர்னமி, பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் சதுரகிரிகோவிலுக்கு செல்லக்கூடிய பாதையில் அமைந்திருக்கும் சங்கிலிப்பாறை, மாங்கனி ஓடை, வழுக்குப்பாறை ஆகிய பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக வந்துகொண்டிருப்பதால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மழை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமாவாசை தினம் என்பதாலும், தீபாவளிக்கு மறுநாளான இன்று தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருப்பதால் குடும்பத்துடன் மக்கள் தாடிப்பாறை அடிவாரம் என்ற இடமாகிய சதுரகிரி அடிவாரத்தில் குவிந்து தங்களது மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். மலையேற அனுமதி மறுக்கப்பட்டாலும் அவர்கள் குடும்பமாக வந்து வனத்துறை அலுவலகம் முன் உள்ள கேட் முன்பு தீபம் கொளுத்தி, தேங்காய் உடைத்து தங்களுடைய நேர்த்தி கடனை வெளிப்படுத்தி பக்தியினை வெளிப்படுத்தி வருகின்றனர். காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்டை மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் குடும்பமாக வந்து விடுமுறையை கழித்து வருகின்றனர்.

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு