சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் தமிழக உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சில இடங்களில் நேற்று வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு அதிகமாக இருந்தது. சென்னை, வேலூர் மாவட்டம், புதுச்சேரியில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தது. கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேலும், தர்மபுரி, மதுரை, திருவள்ளூர், நீலகிரி, மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் அதிகரித்தது. வேலூரில் 108 டிகிரி பாரன்ஹீட், சென்னை, திருத்தணியில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. 12 மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை பதிவானது.

தமிழ்நாட்டின் உட்பகுதியில் வெப்ப அலை நிலவியது. இதனால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக வேலூரில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. திருவள்ளூர், பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. மேலும் 13ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இன்றும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 106 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும். ஓரிரு இடங்களில் இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். இந்நிலையில், அரபிக் கடலில் நிலை கொண்டு இருந்த பிப்பர்ஜாய் புயல் நேற்று காலையில் வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்தது. இன்றும் அதே திசையில் நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாட்டம் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரம்: விலை குறைந்து வருவதால் நகை வாங்க பலர் ஆர்வம்

வட தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும்: 2 இடங்களில் 111 டிகிரி வெயில்

வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிப்பு; சென்னைவாசிகள் வீடுகளுக்குள் முடங்கினர்: மாலையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் வெள்ளம்