ராகுல்காந்தியின் சென்னை வருகை திடீர் ரத்து

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்தில், ராகுல்காந்தி அஞ்சலி செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவரது வருகை ரத்து செய்யப்பட்டு விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வர்களாக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்க உள்ளனர். இவர்களின் பதவியேற்பு விழா இன்று பெங்களூருவில் 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளும் ராகுல்காந்தி விழா முடிந்த பிறகு சென்னை வருவதாக இருந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதை உறுதி செய்தார். சென்னை வரும் ராகுல்காந்தி இரவு தங்கி மறுநாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாளை காலை 8 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடத்துக்கு சென்று அங்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 32ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராகுல்காந்தி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது வருகை உறுதி செய்யப்படவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் கூறினர்.

Related posts

வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

நோயாளிகளுக்கு ஒரே ஊசி பயன்படுத்திய விவகாரம் : இணை இயக்குனர் விசாரணை!!

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.. வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி!!