ரேபரேலியில் போட்டியிடும் ராகுல் காந்தியின் வேட்புமனுவை நிராகரிக்க தேர்தல் கமிஷனிடம் புகார்: 2 காரணங்களை கூறி விளக்கம்

லக்னோ: ரேபரேலியில் போட்டியிடும் ராகுலின் வேட்புமனுவை 2 காரணங்களால் நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக கேரள மாநிலம் வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த தொகுதியில் வாக்குப்பதிவும் முடிந்துவிட்டது. இந்நிலையில் ரேபரேலியில் ராகுல்காந்தியின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்திற்கு அனிருத் பிரதாப் சிங் என்பவர் சார்பில் வழக்கறிஞர் அசோக் பாண்டே தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒரு வழக்கில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தாலும் கூட, அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம் என்று நீதிமன்றம் கூறவில்லை. எனவே அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும் 2006ம் ஆண்டு ராகுல் காந்தி வெளியிட்ட அறிவிப்பில், தனது தேசியத்தை இங்கிலாந்து என்று குறிப்பிட்டார். அதனால் இங்கிலாந்து குடிமகனாக இருக்கும் ஒருவர், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள்

பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்