புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் விசாரணையை தொடங்கியது சிறப்புக் குழு

புதுச்சேரி: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியது. புதுச்சேரி சோலை நகரில் கடந்த சனிக்கிழமை 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கொலை வழக்கில் கருணாஸ், விவேகானந்தன் ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது. புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான 2 பேர் உட்பட 7 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 2 பேர் மற்றும் சந்தேகப்படும் 5 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக ஜிப்மர் ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று இரவு உத்தரவு வெளியிட்டது. இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது. சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் தடய அறிவியல் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related posts

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த வழக்கில் அவரது உதவியாளர் செந்தில் முன்ஜாமின் மனு தள்ளுபடி

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என ரூ.30 கோடி பந்தயம் கட்டியவர் விஷம் குடித்து தற்கொலை!!