புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி கடந்த 3 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் சடலமாக மீட்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி ஆர்த்தி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசியது தெரியவந்துள்ளது. சிறுமியின் வீடு அருகே சாக்கடையில் சாக்கு மூட்டையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முத்தியால்பேட்டையை சேர்ந்த சிறுமி ஆர்த்தி 4 நாட்களுக்கு முன்பு மாயமானார். சிறுமி கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி சோலைநகா் பாடசாலை வீதியைச் சோ்ந்தவா் நாராயணன். இவரது 10 வயது மகள் ஆர்த்தி அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை தனது வீட்டின் அருகே விளையாடச் சென்றவா் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, அவரது பெற்றோர், உறவினா்கள் மற்றும் சிறுமியின் தோழிகளின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மாயமான சிறுமியைத் தேடி வந்தனர்.

மேலும், சோலைநகர் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த அனைத்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் சிறுமி சோலைநகரில் இருந்து வெளியே செல்லும் காட்சி இடம்பெறவில்லை. பின்னர் போலீசார் அப்பகுதியை சுற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கடந்த 4 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி ஆர்த்தி குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், போலீசார் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டி சோலைநகர் பொதுமக்கள் நேற்று முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நேற்று முழுவதும் போலீசார் சிறுமியை தேடியுள்ளனர். இந்நிலையில் தற்போது சிறுமியின் வீட்டின் அருகே அம்பேத்கர் என்ற பகுதியில் பாதாள சாக்கடை உள்ளது. அதில் ஒரு மூட்டை மிதந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

அதனை போலீசார் சோதனை செய்த போது அது மாயமான சிறுமியின் உடல் என்பதும், உடல் போர்வை மற்றும் வேட்டியால் சுற்றி சாக்கடையில் வீசப்பட்டது என்பதும் தெரிய வந்தது. சிறுமி காணாமல்போய் 4 நாட்கள் ஆகிய நிலையில் அவரது உடல் அழுகிய நிலையில் கிடைத்துள்ளது.

தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் சூழ்ந்துள்ளார். பின்னர் போலீசார் சிறுமியின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு