பெண் பணியாளர்களுக்கு ரேஷன் கடைகளில் கழிவறை வசதி செய்து தர வேண்டும்: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொதுவிநியோக திட்டம் ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதியினை உரிய கணக்கில் செலுத்திடவும், அதன் விபரத்தினை பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சம்பள கணக்கு சீட்டு விபரம் என பணியாளர்களுக்கு தெரிவிப்பது சம்பந்தமான அரசாணை வெளியிட்டு 5 வருடங்களாகியும் அதனை இதுவரை நடைமுறைப்படுத்தாமல் உள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கருணை ஓய்வூதியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் பணிபுரிந்து ஓய்வு பெற்று உயிருடன் உள்ள மற்றும் தற்போது பணிபுரியும் ஓய்வு பெற உள்ள பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்று அரசாணை வெளியிட்டும் அதனையும் நடைமுறைப்படுத்தாமல் உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், இதுதவிர ரேஷன் கடைகளில் பெரும்பாலும் பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வருவதையொட்டி கடைகளில் கழிவறை வசதி இல்லாத நிலையில் பணியாளர்களின் சிரமத்தை போக்கிடும் வகையில் கழிவறை வசதி செய்து தரப்பட வேண்டும் எனவும் இக்கடிதம் வாயிலாக கோரிக்கையை முன்வைக்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சீட் கொடுக்காததால் விரக்தி; நான் பாஜகவில் தான் இருக்கிறேன்: நடிகையான மாஜி எம்பி பேட்டி

இந்தியாவுக்கே சவால்விடும் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகின்றார்: கி.வீரமணி பேச்சு